பாஜகவில் இணைந்தார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்!

காரைக்கால் திருநள்ளாறு தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளன. தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி பாஜக, பாமக கட்சியுடனும் ,எதிர்கட்சியான திமுக கட்சி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றன. தமிழகத்தில் எந்த ஒரு கூட்டணியும் இன்றி அனைத்து தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தியது நாம்தமிழர்கட்சி.

bjp

மேலும் தமிழகத்தில் பல கட்சிகள் உள்ளன. அதன் மத்தியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் அமமுக கட்சியானது 2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியுடன் சந்திக்கவுள்ளன. மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியுடன் கூட்டணியில் கேப்டன் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று அழைக்கப்படும் தேமுதிக கட்சி உள்ளது. அதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் அமுமுக கட்சியின் கழக செயலாளர் டி டி வி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் அமமுக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருந்தார் தர்ப்பாரண்யேஸ்வரர் .இந்நிலையில் அவர் தற்போது பாஜகவில் இணைந்தார். மேலும் மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங் ,அர்ஜுன் ராம் மேக் வால் முன்னணியில் பாஜகவில் இணைந்தார்.

From around the web