அம்மா ஸ்கூட்டர் பயனாளிகளுக்கு திடீர் தடை போட்ட தமிழக அரசு

மறைந்த முன்னாள் முதல்வரின் கனவு திட்டங்களில் ஒன்று பெண்களுக்கு 50% மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம். இந்த திட்டத்தை தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம்14ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று அறிமுகம் செய்தது இந்த திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த திட்டத்தின்படி மானிய விலையில் ஸ்கூட்டரை வாங்கி ஒருசிலர் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதனையடுத்து மானிய
 

மறைந்த முன்னாள் முதல்வரின் கனவு திட்டங்களில் ஒன்று பெண்களுக்கு 50% மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம். இந்த திட்டத்தை தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம்14ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று அறிமுகம் செய்தது இந்த திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த திட்டத்தின்படி மானிய விலையில் ஸ்கூட்டரை வாங்கி ஒருசிலர் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதனையடுத்து மானிய விலையில் ஸ்கூட்டரை வாங்கியவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு அந்த ஸ்கூட்டரை விற்பனை செய்ய கூடாது என்று ஒரு ஆணையை சற்றுமுன் பிறப்பித்துள்ளது.

இதன்படி ஸ்கூட்டரை பெறும் பயனாளிகளின் ஆர்சி புத்தகங்களில் சீல் வைக்க முடிவு செய்திருப்பதாகவும், இதனால் இந்த ஸ்கூட்டரை யாரேனும் வாங்கினாலும் அதனை மூன்று வருடங்களுக்கு பெயர் மாற்ற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web