கொரோனா காலத்திலும் தேர்தல் பிரச்சாரம் செய்த அமித்ஷா!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரபரப்பு இருந்து வரும் நிலையில் உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமாகிய அமித்ஷா, டிஜிட்டலில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பீகார் மாநிலத்தில் வரும் நவம்பருடன் முதல்வர் நிதிஷ்குமாரின் ஆட்சி முடிவடைவதால் அக்டோபரில் அம்மாநிலத்தில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று டிஜிட்டல் மூலம் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்ட திருத்தத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார் என்றும், இதேபோன்று
 
கொரோனா காலத்திலும் தேர்தல் பிரச்சாரம் செய்த அமித்ஷா!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரபரப்பு இருந்து வரும் நிலையில் உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமாகிய அமித்ஷா, டிஜிட்டலில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

பீகார் மாநிலத்தில் வரும் நவம்பருடன் முதல்வர் நிதிஷ்குமாரின் ஆட்சி முடிவடைவதால் அக்டோபரில் அம்மாநிலத்தில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று டிஜிட்டல் மூலம் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்ட திருத்தத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார் என்றும், இதேபோன்று பல சாதனைகள் செய்த பீகார் சட்டசபை தேர்தலில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் நிதிஷ்குமார் தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்றது குறித்து அவர் கூறுகையில் பொறுமை இழந்து நடக்க தொடங்கியவர்களை மீட்டு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம் என்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தில் 85% மத்திய அரசு செலுத்தியது என்றும் கூறினார்.

மேலும் எல்லைகளைப் பாதுகாப்பதில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை அடுத்து இந்தியாவும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார்,

From around the web