சென்னை வந்த அமித்ஷா, திடீரென சாலையில் இறங்கி நடந்ததால் பரபரப்பு!

 

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா, இன்று சென்னை வருகை தந்துள்ளதால் சென்னை முழுவதும் பெரும் பரபரப்பில் உள்ளது 

இந்த நிலையில் சற்று முன் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய அமித்ஷாவை முதல்வர் மற்றும் துணை நின்று வரவேற்றனர். இதனை அடுத்து அவர் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் அவரை நோக்கி கையசைத்தார்கள்

amitshah

ஒரு கட்டத்தில் திடீரென காரை நிறுத்தச் சொல்லிய அமித்ஷா காரில் இருந்து கீழே இறங்கி ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று இரு பகுதிகளிலும் உள்ள தொண்டர்களை நோக்கி கையசைத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவருடன் அவரது பாதுகாவலர்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை இல்லாத அளவில் திடீரென பாஜக தலைவர் ஒருவருக்கு தமிழகத்தில் சாலையின் இருபுறங்களிலும் நின்று பாஜக கொடியை அசைத்து கொண்டு வரவேற்பு அளித்தது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

From around the web