பட்டம் பறக்கவிட்டு விளையாடி அமித்ஷா: வைரல் புகைப்படம்!

 

தமிழகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடும் அதே தினத்தில் வட இந்தியாவில் சங்கராந்தி என்ற திருவிழா கொண்டாடுவார்கள் என்பதும் இந்த திருவிழாவின்போது அனைவரும் விண்ணில் பட்டம் பறக்க விட்டு மகிழ்வார்கள் என்பதும் தெரிந்ததே 

அந்த வகையில் இன்று சங்கராந்தி நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் பொதுமக்கள் பலர் பொது இடங்களில் நின்று கொண்டு பட்டத்தை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். யாருடைய பட்டம் உயரமாக பறக்கிறது என்று போட்டி போட்டுக்கொண்டு பட்டத்தை பறக்கவிட்ட கண்கொள்ளா காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

amitshah kite

அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இன்று அகமதாபாத்தில் உள்ள பொது இடமொன்றில் பட்டத் திருவிழாவை கொண்டாடினார். அவர் ஒரு வண்ணமயமான பட்டத்தை கையில் எடுத்து விண்ணில் பறக்க விட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

ஒரு உள்துறை அமைச்சர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி சிறு குழந்தை போல் அவர் பட்டம்விட்ட காட்சியை அவருடன் இருந்தவர்கள் ரசித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web