அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்தை தாண்டி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பாமர மக்கள் மட்டுமின்றி பிரபலங்களையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது என்பது குறித்த செய்தியை அவ்வப்போது பார்த்துக் கொள்கிறோம். அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அவர்களுக்கும் ஒரு பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி
 

அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்தை தாண்டி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாமர மக்கள் மட்டுமின்றி பிரபலங்களையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது என்பது குறித்த செய்தியை அவ்வப்போது பார்த்துக் கொள்கிறோம். அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அவர்களுக்கும் ஒரு பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பாலிவுட் திரை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது

இதனை அமிதாப்பச்சன் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். தற்போது அமிதாப்பச்சன் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

அமிதாப்பச்சனுக்கு என்ற செய்தி அறிந்து அவரது ரசிகர்கள் அவரை விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்

மேலும் அமிதாப்புக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய் ஆகியோர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

From around the web