பீகாரை அடுத்து அமித்ஷாவின் அடுத்த குறி: தமிழகத்திற்கு வருகை!
 

 

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவருமான அமித்ஷாவின் அபாரமான திட்டமிடுதல் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

அந்த வகையில் சமீபத்தில் சரியான கூட்டணி மூலம் பீகாரில் ஆட்சியை கைப்பற்றி அமித்ஷா, அடுத்ததாக தமிழகத்தை குறி வைத்துள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இந்த தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற பாஜக திட்டமிட்டுள்ளது

இந்த நிலையில் பீகாரை அடுத்து அமித்ஷாவின் அடுத்த குறி தமிழகம் தான் என்பது என்று கூறப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

பீகார் தேர்தல் முடிவுக்கு பின் அமித்ஷா தமிழகம் வருவது முக்கியத்துவம் தருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அரசியல் சூழல் குறித்து அவர் தமிழக பாஜக தலைவர்களுடன் ஆலோசனை செய்வார் என்றும் கூட்டணி கட்சி தலைவர் அவர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web