அமித்ஷா-ரஜினி சந்திப்பு போயஸ் கார்டனில் இல்லை: அப்படியானால் எங்கே?

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வரும் 21 ஆம் தேதி சென்னை வர இருக்கும் நிலையில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது 

இந்த நிலையில் கடந்த காலங்களில் பிரதமர் மோடி அவர்கள் ரஜினியின் போயஸ் தோட்டம் வீட்டுக்கு சென்ற நிலையில் தற்போது அமித்ஷா போயஸ் கார்டனுக்கு செல்லவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமித்ஷா தங்கும் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு ரஜினிகாந்த் வந்து அவரை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 

rajinikanth

சென்னை வரும் அமித்ஷாவின் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக நிகழ்வுகள் குறித்த பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் லீலா பேலஸ் ஹோட்டலில் அமித்ஷா 21ஆம் தேதி தங்குவதாகவும், மறுநாள் காலை டெல்லி புறப்பட்டு செல்வதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது

இந்த நிலையில் அமித்ஷாவின் நிகழ்ச்சி நிரலில் ரஜினியை சந்திக்கும் நிகழ்வு குறித்து எந்த குறிப்புகளும் இல்லை. எனவே அமித்ஷா லீலா பேலஸில் ஓய்வெடுக்கும் நேரத்தில் ரஜினிகாந்த் அவரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக சந்திப்பாக இருக்குமா? அல்லது அரசியல் சந்திப்பாக இருக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும்

From around the web