உலக பணக்காரர் பட்டியலில் திடீரென பின்வாங்கிய அம்பானி: என்ன காரணம்?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக பணக்காரர் பட்டியலில் பத்தாம் இடத்திற்கு வந்த முகேஷ் அம்பானி அதன்பிறகு எட்டாவது இடம், அதன் பின்னர் ஆறாவது இடம் என படிப்படியாக முன்னேறினார் இதனை அடுத்து சமீபத்தில் உலகின் நான்காவது பணக்காரர் ஆக மாறினார் என்பதும் அவருக்கு முன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசொஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகிய மூவர் மட்டுமே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென
 
உலக பணக்காரர் பட்டியலில் திடீரென பின்வாங்கிய அம்பானி: என்ன காரணம்?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக பணக்காரர் பட்டியலில் பத்தாம் இடத்திற்கு வந்த முகேஷ் அம்பானி அதன்பிறகு எட்டாவது இடம், அதன் பின்னர் ஆறாவது இடம் என படிப்படியாக முன்னேறினார்

இதனை அடுத்து சமீபத்தில் உலகின் நான்காவது பணக்காரர் ஆக மாறினார் என்பதும் அவருக்கு முன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசொஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகிய மூவர் மட்டுமே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென நான்காவது பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி தற்போது ஆறாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 7 நாட்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு படிப்படியாக குறைந்து 2134ல் இருந்து 2091 ரூபாயாக சரிந்துள்ளது

மேலும் இந்த மாத துவக்கத்தில் இருந்த முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பும் தற்போது திடீரென குறைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து உலக பணக்காரர் பட்டியலில் நான்காவது இடத்தில் அம்பானி 6வது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பதும் 4வது இடத்தில் டெஸ்லா உரிமையாளர்கள் எலான் மாஸ்க் அவர்களும் ஐந்தாவது இடத்தில் பெர்னால்ட் அர்நாட் அவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web