தேர்வுக்கு பணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி: மீண்டும் உறுதி செய்த உயர்கல்வித்துறை அமைச்சர்

 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லூரி மாணவர்கள் தேர்வு இன்றி அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அதே நேரத்தில் யுஜிசியின் வழிகாட்டுதல்படி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு மட்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கூறிய போது இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர பிற தேர்வுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று மீண்டும் அறிவித்துள்ளார் 

யுஜிசி மற்றும் ஏ.ஐ.சி.டி.இ வழிகாட்டுதலின்படியே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னரே அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் தேர்ச்சி என்பது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது 

ஏற்கனவே ஏ.ஐ.சி.டி.இ அரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது என்பதும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இதுகுறித்து ஈமெயில் அனுப்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web