ஒருவழியா எல்லா கட்சிகளும் ஒருமனப்பட்டு ஸ்டெர்லைட்டை திறக்க ஆதரவு!

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது!
 
ஒருவழியா எல்லா கட்சிகளும் ஒருமனப்பட்டு ஸ்டெர்லைட்டை திறக்க ஆதரவு!

தமிழகத்தின் முத்து நகரமாக காணப்படுகிறது தூத்துக்குடி மாநகரம்.  தூத்துக்குடியில் உப்பு தயாரிக்கப்பட்டு வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது, மேலும் சிறப்பு இருந்தாலும் அங்கு காணப்படும் ஒரு ஆலைக்கு எதிராக அனைத்து மக்களும் போராட்டம் மேற்கொண்டனர். போராட்டத்தின் போது பொதுமக்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதனால் அந்த ஆலை ஆனது மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த ஆலையை திறக்க அனைத்து கட்சிகளும் ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இத்தகைய ஆலையின் பெயர் ஸ்டெர்லைட். இதனை வேதாந்தா நிறுவனம் இயங்குகிறது.eps

வேதாந்தா நிறுவனம் சில தினங்களுக்கு முன்பாக ஸ்டெர்லைட் ஆக்சிசன்  தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி இருந்தது. ஆனால் தமிழகத்தில் பல கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது ஆட்சி தயாரிக்க இந்த ஆலைக்கு ஆதரித்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட அனைத்து கட்சிகள் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த ஆதரவு தெரிவித்தன. மேலும் ஆக்சிசன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தருவது குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தற்போது நடைபெற்றது.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைச் செயலகத்தில் 2.30 மணி நேரம் ஆலோசித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் இதில் திமுக காங்கிரஸ் பாஜக இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஒருமித்த ஆதரவு தெரிவித்தன. மேலும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுவிக்கப்படாத நிலையில் ஆக்சிசன் உற்பத்திக்காக தற்போது மதிமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

From around the web