வரும் சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலங்கள் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை நாளாக இருக்கும் நிலையில் வரும் சனிக்கிழமை பிப்ரவரி 27ஆம் தேதி 4-வது சனிக்கிழமை தினத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என்று தமிழ்நாடு அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் பிப்ரவரி 27ஆம் தேதி சனிக்கிழமை அன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மற்றும் சட்ட முன் வடிவுகள் அறிமுகம் செய்தல் மற்றும் நிறைவேற்றப்பட உள்ளன
எனவே பிப்ரவரி 27ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறித்து தற்போது ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.