"ஆல் பாஸ்" எல்லாம் கிடையாது!எதிர்காலம் முக்கியம்; கண்டிப்பா +2 தேர்வு நடக்கும்!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்!
 
no all pass

தமிழகத்தில் பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைய பெற்றிருப்போம். ஆனால் தற்போது தமிழகத்தில் மே மாதமே முடியும் நிலையிலும் இந்த அளவு கூட தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவில்லை. காரணம் என்னவெனில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. இதனால் இந்த பொதுத் தேர்வு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற பின் நடத்தப்படலாம் என்று கால அட்டவணை குறித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்கொல்லி நோய் தாக்கம் அதிகரித்துள்ளது.anbil mahesh

இதனால் தற்போது வரை தேதி குறிப்பிடாமல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அதில்  மு க ஸ்டாலின் முதல்வராக உள்ளார். மேலும் அவருக்கு உதவியாகஅவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி  நியமிக்கப்பட்டுள்ளார். .அவரிடம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றி கேள்வி கேட்கும் போது அது குறித்து ஆலோசனை செய்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் அதற்கு அடுத்த முறை கேட்ட பொழுது தமிழகத்தில் நிச்சயமாக ஆல் பாஸ் கிடையாது என்றும் மாணவர்களின் எதிர்காலத்தை முக்கியம் என்றும் அவர் கூறினார்.  தற்போது சிலவற்றை அவர் கூறியுள்ளார், அதன்படி தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் ஆலோசனையில் கலந்துகொண்ட பின்னர் அவர் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். இதனால் தமிழக மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

From around the web