மாஸ்க் அணிந்தால் மட்டுமே மதுபானம்! இதிலும் கட்டுப்பாடு!"சுற்றறிக்கை"

மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் விற்கப்பட வேண்டும் டாஸ்மாக் நிர்வாகம் திட்டம்!
 
மாஸ்க் அணிந்தால் மட்டுமே மதுபானம்! இதிலும் கட்டுப்பாடு!"சுற்றறிக்கை"

சில தினங்களாக மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் ஒரு வார்த்தையாக காணப்படுகிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனாஆனது மக்களின் கண்ணுக்கே தெரியாமல் அவர்கள் சென்று அவர்களை பாதிப்பிற்குள்ளாகிறது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு சென்று அதன் பின்னர் இறுதியில் தங்களது உயிரையும் இழக்கின்றனர். இந்த உயிர்க்கொல்லி நோயான கொரோனா கடந்த ஆண்டில் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும் தற்போது இந்த கொரோனா மீண்டும் அதிகரித்து மக்களை மிகுந்த வேதனை அளிக்கிறது.

tasmac

இந்நிலையில் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்த உள்ளது. மேலும் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது பல குடும்பங்களை அழிக்கும் மதுபானத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை டாஸ்மாக்  நிர்வாகம் கூறியுள்ளது. அதன்படி டாஸ்மார்க் கடைகளில் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானங்களை விற்கவேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும் எக்காரணம் கொண்டும் மதுபானங்களை மொத்த விற்பனை செய்யக்கூடாது என்றும் டாஸ்மாக் நிறுவனம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் எந்த ஒரு கூட்ட நெரிசலும் இருக்கக்கூடாது என்றும் மேலாண் இயக்குனர் கூறியுள்ளார். மேலும் டாஸ்மாக்கில் மது குடிப்போர் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் டாஸ்மாக் கடையின் உள்ளே ஐந்து நபர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்னும் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

From around the web