விமானி அகிலேஷ்குமார் மனைவிக்கு வேலை வேண்டும்: தந்தை உருக்கமான வேண்டுகோள்

கோழிக்கோடு விமான விபத்தில் மரணமடைந்த இணை விமானி அகிலேஷ் குமார் அவர்களின் மனைவிக்கு அரசு வேலை வேண்டும் என்று அகிலேஷ்குமாரின் தந்தை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நேற்று முன்தினம் துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் ஒன்று தரையிறங்கிய போது திடீரென விபத்துக்குள்ளாகியதில் 18 பேர் மரணமடைந்தனர் மேலும் பலர் காயமடைந்தனர் இந்த விபத்தில் கேப்டன் சாதே மற்றும் துணை விமானி அக்லேஷ் குமார் ஆகிய இருவரும் மரணமடைந்தனர் அகிலேஷ் குமாரின் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்பதும்
 

விமானி அகிலேஷ்குமார் மனைவிக்கு வேலை வேண்டும்: தந்தை உருக்கமான வேண்டுகோள்

கோழிக்கோடு விமான விபத்தில் மரணமடைந்த இணை விமானி அகிலேஷ் குமார் அவர்களின் மனைவிக்கு அரசு வேலை வேண்டும் என்று அகிலேஷ்குமாரின் தந்தை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

நேற்று முன்தினம் துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் ஒன்று தரையிறங்கிய போது திடீரென விபத்துக்குள்ளாகியதில் 18 பேர் மரணமடைந்தனர் மேலும் பலர் காயமடைந்தனர்

இந்த விபத்தில் கேப்டன் சாதே மற்றும் துணை விமானி அக்லேஷ் குமார் ஆகிய இருவரும் மரணமடைந்தனர் அகிலேஷ் குமாரின் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்பதும் அவருக்கு இன்னும் ஒருசில தினங்களில் குழந்தை பிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அகிலேஷ் குமாரின் உடல் இன்று அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது இதனையடுத்து அவரது தந்தையின் அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்

அகிலேஷ் குமாரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கும் அவருடைய குழந்தைக்கும் வாழ்வாதாரத்திற்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் அக்லேஷ் குமாரின் மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் அவரும் அவருடைய குழந்தை காப்பாற்றப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web