ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்த அஜித் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு விதிக்கப்பட்டிருப்பதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கவில்லை என்பதும் அதற்கு பதிலாக பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஆன்லைனில் கல்வி பயில வேண்டும் என்றால் தொலைக்காட்சி மற்றும் கேபிள் இணைப்பு இருக்க வேண்டும் என்பதும் அல்லது ஸ்மார்ட் போன் இன்டர்நெட் இணைப்பில் இருக்கவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த வசதிகள் இல்லாத சில மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள்
 
ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்த அஜித் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு விதிக்கப்பட்டிருப்பதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கவில்லை என்பதும் அதற்கு பதிலாக பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆன்லைனில் கல்வி பயில வேண்டும் என்றால் தொலைக்காட்சி மற்றும் கேபிள் இணைப்பு இருக்க வேண்டும் என்பதும் அல்லது ஸ்மார்ட் போன் இன்டர்நெட் இணைப்பில் இருக்கவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த வசதிகள் இல்லாத சில மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் படிக்க முடியாமல் சிரமப்படும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் பகுதியைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் தொலைக்காட்சி இல்லாத ஏழை மாணவர்களின் வீடுகளை தேர்வு செய்து அந்த வீடுகளுக்கு இலவசமாக தொலைக்காட்சியை வழங்கியுள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த உதவிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்

ஏற்கனவே கேரள அஜித் ரசிகர்கள் மாஸ்குகள், சானிடைசர்கள் ஆகியவைகளை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web