ஐஸ்வர்யாராய்க்கு மூச்சுத்திணறலா? அதிர்ச்சியில் அமிதாப் குடும்பத்தினர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன், அபிஷேக்பச்சன் மனைவி ஐஸ்வர்யாராய், மகள் ஆராதித்யா ஆகிய நால்வரும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் அமிதாப், அபிஷேக் ஆகிய இருவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராதித்யா ஆகிய இருவருக்கும் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தது இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் திடீரென நேற்று மருத்துவமனையில்
 

ஐஸ்வர்யாராய்க்கு மூச்சுத்திணறலா? அதிர்ச்சியில் அமிதாப் குடும்பத்தினர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன், அபிஷேக்பச்சன் மனைவி ஐஸ்வர்யாராய், மகள் ஆராதித்யா ஆகிய நால்வரும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் அமிதாப், அபிஷேக் ஆகிய இருவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராதித்யா ஆகிய இருவருக்கும் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் திடீரென நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் சிகிச்சை பெற்று வரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராதித்யா அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவருக்கும் லேசான அறிகுறி மட்டுமே இருந்ததால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் ஆனால் தற்போது இருவருக்கும் லேசாக மூச்சுத்திணறல் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது அமிதாப்பச்சன் உள்பட நால்வரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் விரைவில் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

அமிதாப் மனைவி ஜெயாபச்சனுக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதால் அவர் வீட்டில் உள்ளார்.

From around the web