ஏர்டெல் வழங்கும் இலவச ரீசார்ஜ் திட்டம்: யார் யாருக்கு பொருந்தும்?

 
ஏர்டெல் வழங்கும் இலவச ரீசார்ஜ் திட்டம்: யார் யாருக்கு பொருந்தும்?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் லட்சக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்கள், திரை உலக பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கொரோனாவுக்கு எதிராக போராடும் மத்திய மாநில அரசுகளுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர்

மேலும் நேரடியாக பொது மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு உதவிடும் வகையில் 49 ரூபாய் ரீசார்ஜ் இலவசமாக அளிக்க ஏர்டெல் முன்வந்துள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

49 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 38 ரூபாய் டாக்டைம், 100 எம்பி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்கள் 5 கோடியே 50 லட்சம் பேர் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக அளிக்க ஏர்டெல் முன்வந்துள்ளது. குறிப்பாக கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச திட்டத்தை ஒருமுறை அளிக்க உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web