இந்தியா -பிரிட்டன் இடையே விமான போக்குவரத்து ரத்து!ஏர் இந்தியா அறிவிப்பு!

ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து பிரிட்டனில் செல்லவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது!
 
இந்தியா -பிரிட்டன் இடையே விமான போக்குவரத்து ரத்து!ஏர் இந்தியா அறிவிப்பு!

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக காணப்படும் கொரோனா மக்கள் பல்வேறு இன்னல்களில் சந்தித்துள்ளனர். மேலும் இது கடந்த ஆண்டில் இந்தியாவில் வர தொடங்கி அதன் பின்னர் கடந்த ஆண்டின் இறுதியில் இந்நோயானது கட்டுப்படுத்தப்பட்டன. எனினும் சில தினங்களாக இந்நோயின் தாக்கம் ஆனதே இரண்டாவது அலையாக எழுந்து மக்களுக்கு இன்னல்களை கொடுக்கிறது. குறிப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தாக்கமானது வேகமாக பரவி வருகிறது .இதனால் அம்மாநில அரசின் சார்பில் பல்வேறு விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதித்துள்ளன.

airplane

சில தினங்களுக்கு முன்பாக நியூஸிலாந்து இந்தியாவுடன் இருந்தால்  விமானப்  போக்குவரத்து சேவையை ரத்து செய்திருந்தது. மேலும் சென்னையிலும் உள்நாட்டு சேவைகளுக்காக உள்ள விமானங்களையும்ரத்து செய்திருந்தது.   இதனை தொடர்ந்து தற்போது பன்னாட்டு சேவைக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தியா பிரிட்டன் இடையேயான விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து பிரிட்டன்  விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து பிரிட்டன்  விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக  ஏர் இந்தியா அறிவித்துள்ளது. மேலும் பிரிட்டனில் இருந்து இந்தியா வரும், இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லவும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் அதிகரித்து வருவதால் ரெட் லிஸ்ட் பட்டியலில் இந்தியாவை பிரிட்டன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது பிரிட்டனுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web