உதவியாளர் சிக்கி, பெண் அதிகாரியை காட்டிக் கொடுத்தார்;கைது செய்யப்பட்டார்!

லஞ்சம் பெற்ற அரசு பெண் அதிகாரி மற்றும் உதவியாளர் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்!
 
உதவியாளர் சிக்கி, பெண் அதிகாரியை காட்டிக் கொடுத்தார்;கைது செய்யப்பட்டார்!

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமை தற்போது தமிழகமெங்கும் அதிகமாக காணப்படுகிறது. மேலும் எங்கு சென்றாலும் தமிழகத்தில் ஊழல் லஞ்சம் என்ற பேச்சு நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் சில நாட்களுக்கு முன்பாக தங்களது கருத்தினை கூறியுள்ளனர். அதன்படி தமிழகத்தில் இலவச சேவைகளை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைமை உள்ளதால் தாங்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக அவர்கள் தங்களது கருத்தினை முன்வைத்து இருந்த நிலையில் ஒரு சில இடங்களில் இச் சம்பவங்கள் அதிகமாக காணப்பட்டாலும் ஒரு சில பகுதிகளில் அதனை லஞ்ச ஒழிப்பு துறையினர் மிகவும்கையும் களவுமாக பிடித்து தண்டனை வழங்கினர்.lockup

மேலும் இதில் ஈடுபடும் அதிகாரிகள் யார் என பாரபட்சமின்றி அனைவருக்கும் தண்டனை கொடுக்கின்றனர். இந்நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் மற்றுமொரு இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மனநல காப்பகத்தில் அரசு நிதி உதவி பெற்று தர இரண்டரை லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி மற்றும் உதவியாளர் இருவரையும் கைது செய்தனர் ஒழிப்புத் துறையினர்.

மேலும் குமாரபாளையத்தில் உள்ள மனநிலை காப்பதற்கு அரசு நிதியுதவி தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் விஜயகுமார் என்பவர் மனு அளித்திருந்தார்.இந்த மனுவை பெற்ற நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜான்சி என்பவர் இரண்டரை லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காப்பக உரிமையாளர் விஜயகுமார் இடமிருந்து மாற்றுத்திறனாளி அலுவலக உதவியாளர் சேகர் இந்த பணத்தை பெற்ற போது கைது செய்யப்பட்டார். மேலும் சேகர் அளித்த தகவலின் பேரில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜான்சியை கைது செய்தது லஞ்ச ஒழிப்பு போலீசார். இதுபோன்ற அரசு நிதி களையும் இலவச சேவைகளையும் வழங்குவதில் கூட லஞ்சம் தமிழ்நாட்டில் அதிகம் காணப்படுவது வேதனையாக உள்ளது.

From around the web