234 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிடும்: அமைச்சர் ஓஎஸ் மணியன்

 

234 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிடும் என அமைச்சர் ஓ எஸ் மணியன் அதிரடியாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக, பாஜக, பாமக உள்பட ஒரு சில அரசியல் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அந்த கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் கூட்டணி கட்சியினருக்கும் அதிமுகவினருக்கும் இருந்து வருகிறது

இதனை அடுத்து தற்போது திடீரென அமைச்சர் ஓஎஸ் மணியன் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிடும் என அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதனை அடுத்து பாஜக பாமக உள்பட எந்த அரசியல் கட்சிக்கும் அதிமுக கூட்டணியில் இடம் இல்லை என்று மறைமுகமாக கூறியிருப்பதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது 
ஏற்கனவே திமுக வும் கிட்டத்தட்ட 200 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த முறை பெரும்பாலான தொகுதிகளில் திமுக-அதிமுக இடையே நேரடி மோதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web