சசிகலா இல்லாமல் அதிமுக எழுச்சி! கட்சியில் எந்த ஒரு சலசலப்பும் இல்லை!!

அதிமுகவில் எந்த ஒரு சலசலப்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்
 
sasikala

தற்போது நம் நாட்டில் ஆளும் கட்சியாக உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மேலும் தற்போது தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ளது அதிமுக. மேலும் கடந்த தேர்தலில் அதிமுக பெரும்பான்மை பிடித்து ஆட்சியை தக்க வைத்து இருந்தாலும் இந்தத் தேர்தலில் பெரும்பான்மை எதிர்க்கட்சியாக உள்ளது .அதிமுகவில் உள்ள பல முன்னாள் அமைச்சர்களும் கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினர் என்பதும் குறிப்பிடத்தக்க நிலையில் அதிமுக சார்பில் அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். மேலும் அவர் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.jeyakumar

 அவர் இன்றைய காலை சென்னை மயிலாப்பூர் உள்ள டிஜிபி அலுவலகம் சென்று அதிமுக எம்எல்ஏ கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தார். மேலும் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற 14-ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஊரடங்கு காரணமாக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரி மனு, அதனை ஏற்றுக் கொண்டதால் வருகின்ற 14ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் அதில் சட்ட மன்ற நிர்வாகிகள் நியமிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அதிமுகவில் எந்த ஒரு சலசலப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அதிமுகவில் சசிகலா இன்றி கட்சி மிகவும் எழுச்சியாக செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.

From around the web