தோல்வி பயத்தால் பாஜகவை தூண்டிவிட்டு ஐடி ரெய்டு செய்ய வைக்கிறது அதிமுக!

தோல்வி பயத்தால் ஐடி ரெய்டு செய்யவைக்கிறது அதிமுக துரைமுருகன் கூறுகிறார்!
 
தோல்வி பயத்தால் பாஜகவை தூண்டிவிட்டு ஐடி ரெய்டு செய்ய வைக்கிறது அதிமுக!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.  சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கட்சி கூட்டணியாக பாஜக, பாமக கட்சியை வைத்துள்ளது. மேலும் எதிர்க்கட்சியான திமுக கட்சி காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை கூட்டணியில் வைத்துள்ளது. மேலும்  234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

dmk

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர் பல்வேறு பகுதிகளில் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டுகிறார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிக்கும் சென்று மிக மும்மரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஐடி ரெய்டு நிலவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து திமுக கட்சியின் மூத்த உறுப்பினர் துரைமுருகன் கூறுகிறார். மேலும் தோல்வி பயத்தால் ஐடி ரெய்டு செய்யவைக்கிறது அதிமுக எனவும் கூறுகிறார். தோல்வி பயத்தால் அதிமுக ஆனது பாஜகவை தூண்டிவிட்டு ஐடி ரெய்டு செய்ய வைக்கிறது எனவும் கூறுகிறார்.

மேலும் தேர்தல் களத்தில் திமுக வெல்ல முடியாதென்பதால் வருமான வரி சோதனை நடத்துகின்றனர்  என்றும் அவர் கூறினார். மேலும் அதனால் பயந்து விடுவார்கள் என மத்திய அரசு நினைக்கிறது என அவர் சென்னையில் பேட்டியளித்தார். மேலும் ஸ்டாலின் தங்கியிருந்த கல்லூரி உள்பட்ட இடங்களில் நடந்த இடங்களில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் துரைமுருகன் கூறியுள்ளார்.

From around the web