அதிமுக எம்.எல்.ஏ திருமணம்: மணப்பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு!

 

இன்று அதிகாலை கல்லூரி மாணவியை அதிமுக எம்எல்ஏ காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் மணப்பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு என்பவர் கல்லூரி மாணவி சௌந்தர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது ஒரு காதல் திருமணம் என்றும் சாதி மறுப்பு திருமணம் என்றும் எம்எல்ஏ தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தனது மகளை கடத்திச் சென்று எம்எல்ஏ திருமணம் செய்து விட்டதாக சௌந்தர்யாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும்போதே இன்று திருமணம் நடந்துவிட்டதாக புகைப்படங்களுடன் செய்தி செய்திகள் வெளி வந்ததால் சௌந்தர்யாவின் தந்தை அதிர்ச்சி அடைந்தார்

இதன்பின் எம்எல்ஏ எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறிக்கொண்டே அவரது வீட்டின் முன் செளந்தர்யாவின் தந்தை தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை பாதுகாப்பாக மீட்டு மீட்டு சமாதானம் செய்து வருகின்றனர்

From around the web