அதிமுக அதிரடி நீக்கம் !சுயேச்சை மனு  அளித்தவர்கள் வெளியேற்றம்!

அதிமுக தலைமையிலிருந்து மூன்று பேரை கட்சியில் இருந்து நீக்கியதாக உத்தரவிட்டுள்ளது!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி உள்ளது. தேர்தல் ஆணையம் ஆனது  பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக கட்சி உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல்

admk

நிறைவு பெற்றது. மேலும் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள்  பரிசீலனை செய்தனர்.

மேலும் அதிமுக தரப்பிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் போடி தொகுதியிலும் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியானது.  அதிமுக தரப்பில் ஒரு சில உறுப்பினர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் வாய்ப்பு கிடைக்காததால் அவர்கள் வேறு கட்சியில் இணைந்து அல்லது சுழற்சியாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவிலிருந்து போட்டியிட மனு தாக்கல் செய்த மூன்றுபேரை அதிமுக தலைமை நீக்கியதாக உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாநகர் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கிரம்மர் சுரேஷ் அதிமுகவில் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் பொன்னமராவதி ஒன்றிய கழகச் முன்னாள் செயலாளர் அழகு சுப்பையா அதிமுகவிலிருந்து நீக்கியதாக தலைமை உத்தரவிட்டுள்ளது.

From around the web