அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்
 
rajendhira balaji

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்தப்படி நம் தமிழகத்தில் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் தமிழகத்தில் 10 ஆண்டுகளாக அதிமுகவின் ஆட்சி நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது அதிமுக தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது. மேலும் அவ்வப்போது அதிமுகவின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டு வரும்.superme court

அதன் வரிசையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும் இதில் உயர் நீதிமன்ற இருவர் அமர்வில் நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. மேலும் ரூ 7 கோடி சொத்து குவித்ததாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2013ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறித்து தற்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு தடை கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web