அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அகாலமரணம் அடைந்தார்!சோகத்தில் அதிமுக கட்சியினர்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அரங்கநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
 
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அகாலமரணம் அடைந்தார்!சோகத்தில் அதிமுக கட்சியினர்!

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புதிதுபுதிதாக கூட்டணி கட்சிகள் களமிறங்கி தேர்தலை சந்தித்து உள்ளன. அதிலும் குறிப்பாக ஆளும் கட்சியும் கூட்டணி யுடன் தேர்தலை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக மத்தியில் ஆளும் பாஜக கட்சியை வைத்து தேர்தலை சந்தித்து உள்ளன. அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். தேர்தலின்போது பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.admk

மேலும் அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியிலேயே மீண்டும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து அத்தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி இருந்தார். மேலும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தான் கடந்த தேர்தலில் போட்டியிட்ட போடிநாயக்கனூர் தொகுதியில் மீண்டும் வேட்பாளராக போட்டியிட்டு உள்ளார். மேலும் அமைச்சர்கள் பலரும் தாங்கள் கடந்த தொகுதியில் போட்டியிட்ட தொகுதியிலேயே மீண்டும் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜு, ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் களமிறங்கியிருந்தனர்.

தற்போது அமைச்சர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிமுக கட்சியை அதிர வைத்துள்ளது. மேலும் இவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது அதிர்ச்சி அளித்துள்ளது. அதன்படி அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாதன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு 91 வயது உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் அரங்கநாதன் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் அவர் கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web