பரபரப்பான சூழ்நிலையில் கூடியது அதிமுக செயற்குழு: ஓபிஎஸ்க்கு சிறப்பு வரவேற்பு!

 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக, அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன

இந்த நிலையில் இன்று அதிமுகவின் செயற்குழு கூட்டம் கூட உள்ளது. சட்டமன்ற தேர்தலை சந்திப்பது மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசனை இந்த செயற்குழு கூட்டத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

அதுமட்டுமின்றி முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து குறித்த சர்ச்சைகள் அமைச்சர்களிடையே இருந்து வரும் நிலையில் அதுகுறித்து இந்த செயற்குழுவில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.  ஏற்கனவே ஈபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்று அவரது ஆதரவாளர்களான ஒரு சில அமைச்சர்களும், ஓபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்று அவரது ஆதரவாளர்களான ஒருசில அமைச்சர்களும் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய செயற்குழுக் கூட்டம் உச்சகட்ட பரபரப்பில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சற்றுமுன் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஓபிஎஸ் அவர்களுக்கு ஆளுயர மாலை மற்றும் வாள் பரிசு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web