மக்களை ஏமாற்றுகிறது அதிமுக! திமுக தலைவர் மு க ஸ்டாலின்!

சிஏஏ  விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வகையில் அதிமுக செயல்படுகிறது!
 
மக்களை ஏமாற்றுகிறது அதிமுக! திமுக தலைவர் மு க ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் ஏற்பாடுகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி கூட்டணியாக பாஜக பாமக கட்சிகளை வைத்துள்ளது. அதிமுக முதல்வர்  வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர் மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட உள்ளார். மேலும் எடப்பாடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

dmk

இந்நிலையில் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்துள்ளது. மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். மு க ஸ்டாலின் தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

அவர் திருப்பத்தூர்-ஜோலார்பேட்டையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் கூறினார். சிஏஏ விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வகையில் அதிமுக செயல்படுகிறது எனவும் பிரச்சாரத்தில் கூறினார். சிஏஏ விவகாரத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்தது மு க ஸ்டாலின் கூறினார். மேலும் சிஏஏவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார் எனவும் அவர் சுட்டிக் காட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நாடாளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு தற்போது அதிமுக எதிர்க்கிறது எனவும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறினார் மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது எனவும் ஸ்டாலின் கூறினார். விவசாயிகள் வாழ்வை அளிக்கும் வேளாண் சட்டங்களையும் அதிமுக ஆதரித்தது எனவும் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கூறினார்.

From around the web