முடிவு செய்யப்பட்டது அதிமுக முதல்வர் வேட்பாளர்: இன்று காலை அறிவிப்பு

 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முதல்வர் வேட்பாளர் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த முடிவு இன்று காலை 9.45 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவிக்க இருக்கிறார் என்றும் இன்று காலை தலைமைக் கழகத்துக்கு வரும் இருவரும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன 

ஆனால் அதே நேரத்தில் முதல்வர் வேட்பாளருடன் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஒன்றும் அறிவிக்க இருப்பதாகவும் அதில் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் இந்த அறிவிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது 

நேற்று இரவு விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது என்றும், இதனை அடுத்து அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைக்கு இன்றுடன் முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது

From around the web