வயல்களில் வேலை பார்க்கும் பெண்களிடம் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

 திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்!
 
வயல்களில் வேலை பார்க்கும் பெண்களிடம் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஏற்பாடுகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் கட்சியாக அதிமுக கட்சி தன்னுடன் பாரதிய ஜனதா கட்சியையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் கூட்டணியில் வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட உள்ளார். மேலும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட உள்ளார்.

admk

மேலும் அதற்காக அவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிக் கொண்டு வருகிறார். இது மத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக பன்னீர்செல்வம் போட்டியிடவுள்ளார்.

அவர் இன்று காலையிலே அய்யம்பாளையம் போன்ற கிராமங்களில் சென்று  அதிமுகவிற்கு வாக்கு சேகரித்தார். மேலும் அங்கு வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் அவருக்காக அப்பகுதி மக்கள் மிகுந்த வரவேற்பு பெற்றுக் கொடுத்தனர். மேலும் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் அவருக்கு வரவேற்பு கிடைத்தது.

From around the web