காய்கறி வியாபாரம் செய்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கான தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கட்சி மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் பாட்டாளி மக்கள் கட்சியையும் கூட்டணியாக வைத்துள்ளது.

admk

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் அதிமுக வேட்பாளராக பரிதா அறிவிக்கப்பட்டிருந்தார். அதற்கான வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அவர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவர் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொள்வர்களிடமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் குடியாத்தம் பகுதியில் உழவர் சந்தைகளில் காய்கறி வாங்க வந்தவர்களிடமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் இவர் தென்குளக்கரையிலுள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் கீரை மற்றும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் அனைத்து பகுதிக்கும் சென்று வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் பிரச்சாரங்களில் மும்முரம் காட்டி வருகிறார்.

From around the web