பீடி  தொழிலாளர்களுடன் அமர்ந்து பீடி சுற்றிய அதிமுக வேட்பாளர்!

பீடி தொழிலாளர் உடன் அமர்ந்து பீடி சுற்றிய குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி சந்திக்க உள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் எந்த ஒரு கூட்டணியும் இன்றி 234 தொகுதிகளிலும் தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுக்களை தாக்கல் செய்தது நாம் தமிழர் கட்சி

admk

 கட்சியின் வேட்பாளர்களில் 117 ஆண் வேட்பாளர்களும் ,117 பெண் வேட்பாளர்களும் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் பல கட்சித் தலைவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக  தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளராக பரிதா அறிவிக்கப்பட்டார்.

 இந்நிலையில் அவர் காலை முதல் கொண்டே தனது தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும் அவர் அங்கு உள்ள பகுதி மக்களில் மக்களையும் இளைஞர்களையும் நேரில் சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல்  வாக்குகளை சேகரித்து வந்த நிலையில், அவர் கல்லிச்சேரி பகுதியில் பீடி சுற்றும் தொழிலாளர்களுடன் சந்தித்து வாக்கு சேகரித்தார். மேலும் அவர் பீடி சுற்றும் தொழிலாளர்களுடன் அமர்ந்து பீடி சுற்றி தனது கவனத்தை ஈர்த்து வாக்குகளை சேகரித்து வந்தார்.

From around the web