இளைஞர்கள் எதிர்ப்பு! பரப்புரை செய்யாமல் திரும்பிய அதிமுக வேட்பாளர்!

 இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பால் அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் பரம்பரை செய்யாமல் திரும்பினார்!
 
இளைஞர்கள் எதிர்ப்பு! பரப்புரை செய்யாமல் திரும்பிய அதிமுக வேட்பாளர்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சியுடன் கூட்டணி உள்ளது. ஆளும் அதிமுக கட்சி கூட்டணி ஆக பாஜக மற்றும் பாமக கட்சி வைத்துள்ளது. மேலும் எதிர்க்கட்சியான திமுக கட்சி கூட்டணி ஆக ம திமுக கட்சியை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

youths

மேலும் தமிழகத்தில் எதிர்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிக் கொண்டு வருகிறார். மேலும் அதிமுக வேட்பாளர்கள் பலரும் தங்கள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார் ராமலிங்கம். அந்தப்படி ராமலிங்கம் வெள்ளோடு லட்சுமிபுரத்தில் பரப்புரை செய்ய சென்றிருந்தார்.

ஆனால் அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பால் அவர் பரப்புரை செய்ய இயலவில்லை. மேலும் அப்பகுதி இளைஞர்கள் விலைவாசி உயர்வு, அரசு பணிகளில் வடமாநிலத்தவர் நிறைய பிரச்சினைகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இளைஞர்களின் எதிர்ப்பால் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடு படாமல் திரும்பி சென்றுவிட்டார்.

From around the web