நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அதிமுக வேட்பாளர்! தற்போது தேர்தல் பிரச்சாரம்!

கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமார் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பு!
 
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அதிமுக வேட்பாளர்! தற்போது தேர்தல் பிரச்சாரம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் வேலைப்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மேலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார்.

admk

இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அவர் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் அசோக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு சில நாட்கள் முன்பாக நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

தற்போது அதிலிருந்து மீண்டு நலம் பெற்று நிலையில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தின் மூலம் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.மேலும் அவர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவரது வாகனத்தின்  முன்னும் பின்னும் தொண்டர்கள் கூட்டம் ஏராளமானோர் உள்ளனர். மேலும் அவருக்கு மேல வாத்தியங்களுடன் வரவேற்பு பெற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

From around the web