சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அதிமுக கூட்டணி வேட்பாளர்!

அதிமுக கூட்டணியில் உள்ள மூவேந்தர் முன்னேற்ற கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்!

 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியில் புரிந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கட்சி பாஜக மற்றும் பாமக கட்சியை கூட்டணியாக வைத்து சட்டமன்ற தேர்தலில் சந்திக்க உள்ளன.

admk

மேலும் அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார் என்றும், அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் தீவிரமாகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.  அதிமுக கூட்டணியில் மற்றுமொரு கட்சி மூவேந்தர் முன்னேற்ற கழகம் கூட்டணியில் உள்ளன. மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு அதிமுக சார்பில் கும்பகோணம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த கும்பகோணம் தொகுதியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் வேட்பாளராக ஸ்ரீதர் வாண்டையார் அறிவிக்கப்பட்டார்

 மேலும் அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளார். இன்று காலையில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அவர் கும்பகோணம் பகுதியில் உள்ள அசூர் பகுதியில் திறந்த வாகனத்தின் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். மேலும் அங்குள்ள மக்கள் மத்தியில் சிலம்பம் சுற்றி தனது வாக்கு சேகரித்து வந்தார். அப்பகுதி மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

From around the web