பிரச்சாரத்திற்கு மத்தியில் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அதிமுக வேட்பாளர்!

மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நட்ராஜ் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பு!
 

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் இந்த மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகள் பல வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக பாமக மற்றும் பாஜக கட்சி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. அதில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அவர் தமிழகம் முழுவதும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்.

admk

மேலும் அவர் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் கடந்த முறை போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட உள்ளார். அதிமுக சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வேட்பாளராக நட்ராஜ் அறிவிக்கப்பட்டார். அவர் இன்று காலை ஜீப்பில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கச்சேரி சாலை, லஸ் கார்னர், நாகேஸ்வர பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் அவரிடத்தில் என்ன செய்வீர்கள் என்பது குறித்த கேள்விகள் எழுப்பினார். பிரச்சாரத்தின் மத்தியில் அவரது கேள்விகளுக்கும் அதிமுக வேட்பாளர் நட்ராஜ் பதிலளித்தார். மேலும் ஆதரவாளர்களுடன் சென்று துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் நட்ராஜ்.

From around the web