"அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் மக்கள் செல்வாக்கு உள்ளது "என்று கூறுகிறார் துறைமுக வேட்பாளர் வினோஜ்!

திமுகவின் கோட்டையில்  போட்ட  ஓட்டை என்று கூறுமளவுக்கு வெற்றி என்று கூறுகிறார் துறைமுக வேட்பாளர் வினோஜ்!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது .இதில் தமிழகத்தில் ஆளும் கட்சி அதிமுக -பாஜக கூட்டணி வைத்துள்ளது.  இந்நிலையில் அதிமுகவிற்கு 20 தொகுதிகளை வழங்கியது.20 தொகுதிகளையும் ஏற்றுக்கொண்டது பாஜக.மேலும் பாஜக அதற்கான வேட்பாளர்களின் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி பாஜகவின் மாநில தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுவார் அதன்படி அவர் இன்று வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார்.

bjp

மேலும் நடிகையும் பாஜகவின் உறுப்பினருமான நடிகை குஷ்புவுக்கு ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் துறைமுகத்தில் பாஜகவின் சார்பில் வினோஜ் போட்டியிடுவார் என்றும் கூறியுள்ளது. தற்போது  கூறுகிறார், அவர் "அதிமுகவுக்கும் பாஜகவுக்கும்  மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது என்றும் கூறினார்".

திமுகவின் கோட்டையில் போட்ட  ஓட்டை தான் என்று கூறும் அளவுக்கு வெற்றி இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் நிச்சயமாக அதிமுக கூட்டணியில் பாஜக சட்டப்பேரவைக்கு நுழையும் எனவும் அவர் கூறி நம்பிக்கை தெரிவித்துள்ளார்  வேட்பாளர் வினோஜ். அதிமுகவானது பாஜகவிற்கு ஒரு மக்களவை தொகுதியையும் ஒதுக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web