பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதா: பாஜகவுக்கு இன்னொரு வெற்றி!

 

பாஜக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து சிஏஏ சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களையும் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் நிறைவேற்றி வருகிறது என்பதும் தெரிந்ததே 

அந்த வகையில் தற்போது சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் பலத்த எதிர்ப்பு இருந்த போதிலும் இந்த மசோதாக்கள் சற்றுமுன் மாநிலங்களவையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது 

திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இருப்பினும்  இந்த மசோதா வெற்றிகரமாக தற்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த மசோதா விரைவில் குடியரசுத்தலைவரின் அனுமதிக்காக அனுப்பப்படும் என்று தெரிகிறது

From around the web