மீண்டும் முழு ஊரடங்கு: தமிழகத்தின் அண்டை மாநில முதல்வர் அறிவிப்பால் பரபரப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே ஒரு சில மாதங்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டாலும் அதன் பின் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த 7ஆம் கட்ட ஊரடங்கில் மிக அதிக அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்தது இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு
 

மீண்டும் முழு ஊரடங்கு: தமிழகத்தின் அண்டை மாநில முதல்வர் அறிவிப்பால் பரபரப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே

ஒரு சில மாதங்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டாலும் அதன் பின் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த 7ஆம் கட்ட ஊரடங்கில் மிக அதிக அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து தற்போது புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் முழு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளார்

முழு ஊரடங்கு காரணமாக வருவாய் பாதித்தாலும் பரவாயில்லை என்றும் புதுமை மக்களின் பாதுகாப்பு தான் தனக்கு முக்கியம் என்றும் எனவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதுவை மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்ற தகவலால் அம்மாநிலத்தில் இருந்து பலர் வெளியேறி தமிழகம் வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web