டிக்டாக்கை அடுத்து ஹலோவும் முடங்கியது: கோடிக்கணக்கான பயனர்கள் நிலை என்ன?

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே சமீபத்தில் கால்வான் என்றா பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர் என்பது தெரிந்ததே சீன ராணுவத்தினரின் இந்த அராஜகப் போக்கை கண்டித்து சீன பொருட்களை வாங்க மாட்டோம் என்றும் சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோஷங்கள் முழங்கின இதன் அடிப்படையில் நேற்று இரவு அதிரடியாக மத்திய அரசு சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. இதில் குறிப்பாக டிக்
 

டிக்டாக்கை அடுத்து ஹலோவும் முடங்கியது: கோடிக்கணக்கான பயனர்கள் நிலை என்ன?

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே சமீபத்தில் கால்வான் என்றா பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர் என்பது தெரிந்ததே

சீன ராணுவத்தினரின் இந்த அராஜகப் போக்கை கண்டித்து சீன பொருட்களை வாங்க மாட்டோம் என்றும் சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோஷங்கள் முழங்கின

இதன் அடிப்படையில் நேற்று இரவு அதிரடியாக மத்திய அரசு சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. இதில் குறிப்பாக டிக் டாக் மற்றும் ஹலோ செயலியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அனைத்து மொபைல்களிலும் டிக்டாக் செயலிழக்கச் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்று முன்னர் ஹலோ செயலியும் அனைத்து மொபைல்களிலும் செய்யப்பட்டது

இதனை அடுத்து டிக்டாக் மற்றும் ஹலோ செயலியில் இருக்கும் கோடிக்கணக்கான பயனர்களை நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது

From around the web