ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிப்பது இந்தியாவில்தான்… ராகுல் காந்தி!!

கொரோனாத் தொற்று மார்ச் மாதம் இந்தியாவில் கால் பதித்த நிலையில், கட்டுக்குள் கொண்டுவர மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் மக்களின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு மக்கள் உணவு மற்றும் பணத் தேவைக்காகப் போராடிய நிலையில் ஊரடங்கானது கொரோனாத் தொற்று அதிகமுள்ள இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் தளர்த்தப்பட்டது. இந்தநிலையில் ராகுல் காந்தி உலகிலேயே ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிப்பது இந்தியாவில்தான் என்று குற்றம்
 
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிப்பது இந்தியாவில்தான்… ராகுல் காந்தி!!

கொரோனாத் தொற்று மார்ச் மாதம் இந்தியாவில் கால் பதித்த நிலையில், கட்டுக்குள் கொண்டுவர மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் மக்களின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு மக்கள் உணவு மற்றும் பணத் தேவைக்காகப் போராடிய நிலையில் ஊரடங்கானது கொரோனாத் தொற்று அதிகமுள்ள இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் தளர்த்தப்பட்டது.

இந்தநிலையில் ராகுல் காந்தி உலகிலேயே ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிப்பது இந்தியாவில்தான் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிப்பது இந்தியாவில்தான்… ராகுல் காந்தி!!

அதாவது ஊரடங்கு காரணமா இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி குறித்து பலவிதமான குற்றச்சாட்டுகளை வைத்த ராகுல் காந்தி, ஊரடங்கும் தோல்வியில் முடிந்தது, பொருளாதாரமும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது என இரட்டை அடி இந்தியாவுக்கே என்றும் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி கூறும்போது, “கொரோனாவால் உலகமே முடங்கிக் கிடக்கின்றது, உண்மையில் டிசம்பர் மாதம் இதுபோன்ற ஒரு விஷயத்தினை நாம் கற்பனை செய்திருக்கவும் மாட்டோம். உலகப் போர் நடைபெற்றபோது கூட, இப்படி ஒரு சம்பவம் அரங்கேறவில்லை.

உண்மையில் உலக வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாக இது அமைந்துவிட்டது, இந்தியாவில் ஊரடங்கு 2 மாதங்களைத் தாண்டி இருந்தும் அது பயனளிக்கவில்லை. உலகிலேயே ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிப்பது இந்தியாவில்தான்.

இதனால் நாம் ஊரடங்கினால் தோல்வியினையே சந்தித்துள்ளோம் என்பது ஆணித்தரமான உண்மை” என்று கூறியுள்ளார்.

From around the web