சாத்தான்குளம் விவகாரம்: களத்தில் இறங்கிய கமல்-ரஜினியால் பரபரப்பு

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு இணையான இந்த லாக்கப் மரணத்தை தமிழ் திரையுலகினர் பலர் கண்டித்து, ஆவேசமாக தங்களுடைய ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயராஜ்
 

சாத்தான்குளம் விவகாரம்: களத்தில் இறங்கிய கமல்-ரஜினியால் பரபரப்பு

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு இணையான இந்த லாக்கப் மரணத்தை தமிழ் திரையுலகினர் பலர் கண்டித்து, ஆவேசமாக தங்களுடைய ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயராஜ் மனைவியிடமும் அவருடைய மகளிடமும் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது இந்த செய்தியை கராத்தே தியாகராஜன் அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதன்பின்னர் ரஜினியை அடுத்து சற்று முன்னர் ஜெயராஜ் மனைவி மற்றும் மகளிடம் தொலைபேசி மூலமாக கமல்ஹாசனும் ஆறுதல் கூறியதாகவும் அதுமட்டுமின்றி மக்கள் மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாசலம் அவர்கள் ஜெயராஜ் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் வந்துள்ளன

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவருமே தொலைபேசி மூலம் ஆறுதல் கூறிய செய்தி ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றன

From around the web