ராஜஸ்தானை அடுத்து மேலும் ஒரு மாநிலத்தில் செஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை!

 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வு காரணமாக காய்கறிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து 91.98 எனவும் டீசல் விலையும் 31 காசுகள் உயர்ந்து என்பது 85.31 என்ற விலையிலும் விற்பனை ஆகி வருகிறது. இந்த நிலையில் நேற்று ராஜஸ்தானில் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தொட்டதால் அம்மாநில மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்

petrol

இந்த நிலையில் ராஜஸ்தானை அடுத்து தற்போது மத்தியபிரதேச மாநிலத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்து உள்ளது. ராஜஸ்தானில் இன்றைய பெட்ரோல் லிட்டர் விலை 100.13 ரூபாய் என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் சென்னையிலும் பெட்ரோல் விலை செஞ்சுரி அடிக்க வாய்ப்பு இருப்பதால் மத்திய மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

From around the web