20 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த காதணி கிடைத்த அதிசயம்; இப்போதைய மதிப்பு என்ன தெரியுமா?

இருபது ஆண்டுகளுக்கு முன் நெல் வயலில் வேலை செய்தபோது தொலைந்த காதணி தற்போது கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது கேரளாவைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் கடந்த 2000ம் ஆண்டு நெல் வயல் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது காதணி எதிர்பாராதவிதமாக தொலைந்துவிட்டது. இதனை அடுத்து அவரும் அவருடன் வேலை பார்த்தவர்கள் ஒரு வாரமாக அந்த காதணியை தேடி உள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை இந்த நிலையில் இன்று அதே நிலத்தில் பெண் ஒருவர்
 

20 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த காதணி கிடைத்த அதிசயம்; இப்போதைய மதிப்பு என்ன தெரியுமா?

இருபது ஆண்டுகளுக்கு முன் நெல் வயலில் வேலை செய்தபோது தொலைந்த காதணி தற்போது கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

கேரளாவைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் கடந்த 2000ம் ஆண்டு நெல் வயல் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது காதணி எதிர்பாராதவிதமாக தொலைந்துவிட்டது. இதனை அடுத்து அவரும் அவருடன் வேலை பார்த்தவர்கள் ஒரு வாரமாக அந்த காதணியை தேடி உள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை

இந்த நிலையில் இன்று அதே நிலத்தில் பெண் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்த போது அந்த காதணி அவரது கையில் கிடைத்தது. இதே வயலில் காதணியை தொலைத்த பெண்ணின் மகளும் வேலை செய்து கொண்டிருந்ததால் அந்த காதணி தனது தாயார் உடையது என்று கூறினார்

இதனையடுத்து அந்த காதணி உரிய பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த காதணி தற்போது கிடைத்ததை அறிந்து அந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன் அந்தக் காதணியின் மதிப்பு வெறும் 4400 என்பதும் தற்போது அதன் மதிப்பு 44,000 என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web