ஆஸ்திரேலியா தூதரகத்தை முற்றுகையிட்டனர் "ஆப்கானியர்"!!

ஆஸ்திரேலியா தூதரகத்தை ஆப்கானிஸ்தான் மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்
 
afghan

தற்போது நம் உலகத்தில் உள்ள பல நாடுகளில் மிகவும் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது ஆப்கானிஸ்தான் நாட்டில் நடைபெறுகின்ற கொடுமைகள். ஏனென்றால் அங்கு தாலிபான்களின் வருகையால் ஆப்கானிஸ்தான் மக்கள் பலரும் சித்தரிக்கப்படுகின்றனர். மேலும் அந்நாட்டு பிரதமர் சில தினங்களுக்கு முன்பாக வேறு நாட்டிற்கு சென்றதாகக் செய்தி வெளியாகியது. மேலும் அமெரிக்காவின் ஒரு சரக்கு விமானத்தில் ஏராளமான மக்கள் பயணித்திருந்தனர். மேலும் அந்த விமானத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட மக்கள் பயணித்ததாக கூறப்படுகிறது.afghan

மேலும் அதில் விமானத்தில் இறக்கையில் கூட பல மக்களும் பயணித்ததாக கூறப்படுகிறது. மேலும் பறக்கும் போது ஒரு சிலர் இறக்கையிலிருந்து விழுந்தனர் மேலும் ஒரு சிலர் விமானத்தின் சக்கரங்களில் சிக்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் மக்கள் ஆஸ்திரேலிய தூதரகத்தை முற்றுகையிட தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப்படி ஆஸ்திரேலியாவில் குடியேற விசா அனுமதி கோரி டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன் ஆப்கானியர்கள் முற்றுகையிட்டுள்ளனர். மேலும் ஐநா அகதிகள் மறுவாழ்வு தொடர்பான அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தூதரக அதிகாரிகள் கூறியதால் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் ஐநா அகதிகள் நல அமைப்பிடம் இருந்து ஆப்கானியர் கோரிக்கைக்கு பதில் கிடைக்காததால் வேதனை. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி விட்டதால் மீண்டும் நாடு திரும்ப பலரும் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

From around the web