அடுத்த வாரம் திருமணம், இன்று தற்கொலை செய்து கொண்ட வழக்கறிஞர்: செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இன்று திடீரென அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள சிலாவட்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில்நாதன். இவருக்கு பெற்றோர்கள் பெண் பார்த்து அடுத்த வாரம் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமண வேலைகளை இரு வீட்டாரும் விறுவிறுப்பாக பார்த்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென வழக்கறிஞர் செந்தில்நாதன் தனது
 

அடுத்த வாரம் திருமணம், இன்று தற்கொலை செய்து கொண்ட வழக்கறிஞர்: செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இன்று திடீரென அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள சிலாவட்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில்நாதன். இவருக்கு பெற்றோர்கள் பெண் பார்த்து அடுத்த வாரம் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமண வேலைகளை இரு வீட்டாரும் விறுவிறுப்பாக பார்த்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென வழக்கறிஞர் செந்தில்நாதன் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென இன்று செந்தில்நாதன் தற்கொலை செய்து கொண்டது மணமகள் வீட்டார்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர் செந்தில்நாதன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் லெட்டர் உட்பட எதையும் எழுதி வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அவரது மொபைல் போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

From around the web