நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளதா? வழக்கறிஞர் பேட்டியால் அதிர்ச்சி

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து அந்த தேதியிலாவது தூக்கிலிட வேண்டும் என நிர்பயாவின் தாயார் உள்பட அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங் ’தனது கட்சிக்காரர்களுக்கு இன்னும் நிறைய சட்டத்தீர்வுகள் பெற வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் இன்னும் நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றும் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை
 
நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளதா? வழக்கறிஞர் பேட்டியால் அதிர்ச்சி

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து அந்த தேதியிலாவது தூக்கிலிட வேண்டும் என நிர்பயாவின் தாயார் உள்பட அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங் ’தனது கட்சிக்காரர்களுக்கு இன்னும் நிறைய சட்டத்தீர்வுகள் பெற வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் இன்னும் நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றும் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நிர்பயா பாலியல் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவுக்கு சீராய்வு மனு தாக்கல் செய்ய மூன்று வாய்ப்புகள் இருப்பதாகவும் அதையும் பயன்படுத்துவோம் என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார். இதனால் திட்டமிட்டபடி மார்ச் 3ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

From around the web