ஆக்ஸிஜனின் லாரிகள் எந்தவித தடையுமின்றி கொண்டு செல்ல அறிவுரை!

இந்தியாவில் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க இந்திய பிரதமர் அறிவுறுத்தல்!
 
ஆக்ஸிஜனின் லாரிகள் எந்தவித தடையுமின்றி கொண்டு செல்ல அறிவுரை!

இந்தியாவில் கடந்த ஆண்டின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த கொரோனா தாக்கமானது தற்போது மீண்டும் எழுந்துள்ளது மிகவும் சோகத்தைத் ஏற்படுகிறது. மேலும் உத்தர பிரதேசம் மகாராஷ்டிரம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கொரோனா வீரியம் உள்ளதாக காணப்படுகிறது.இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளன.தமிழகத்திலும் பல்வேறு உத்தரவுகளும் ஆணைகளும் தடைகளும்  பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் குறிப்பாக பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்  பின்பற்றுதல் போன்றவையும் நடைமுறையில் உள்ளது.

oxegen

மேலும் இவற்றை  மீறுபவர் மீது கடுமையான நடவடிக்கையும் அபராத தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்தியாவில் ஆட்கொல்லி நோயான கொரோனாக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது உபயோகிக்கப்படுகின்றன. மேலும் மூன்றாவதாக தடுப்பூசி ரஷ்ய நாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது அவையும் நடைமுறையில் உள்ளன. மேலும் கொரோனா  மருந்தானது அனைத்து அரசு மருத்துவமனையிலும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்குமிடமாக ஒவ்வொரு அரசு மருத்துவமனையும் முன்னேற்பாடுகளுடன் உள்ளன. இந்நிலையில் சில தினங்களாக இந்தியாவில் ஆக்ஸிஜன் சிலிண்டரின் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக தமிழகத்தில் நேற்றைய தினம் பல பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காணப்பட்டது. மேலும் கொரோனா  சிகிச்சைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அதனால் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை தற்போது உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்தியாவில் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார் மேலும் சிலிண்டர் கொண்டு செல்லும் லாரிகள் எவ்வித தடையுமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

From around the web