பாபர் மசூதி இடிப்பை அத்வானி, உமாபாரதி தடுக்க முயற்சித்தனர்: அதிரடி தீர்ப்பு

 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிய நிலையில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகவில்லை. ஆனால் எல்.கே.அத்வானி உட்பட 6 பேரை தவிர மற்ற அனைவரும் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மேலும் லக்னோ நீதிமன்ற பகுதியில் இந்துத்துவா அமைப்பு ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்றும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது

2,000 பக்க தீர்ப்பை வாசித்த நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து அனைவரும் விடுவிப்பு என அதிரடியாக தீர்ப்பளித்தார். எனவே எல்.கே.அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேர்களும் இந்த வழக்கில் குற்றவாளிகள் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

மேலும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மசூதியை இடிக்க முற்பட்டதை தடுக்க முயன்றனர் என்றும், மசூதி இடிப்பு சமயத்தில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ, வீடியோ ஆதாரங்களில்  உண்மைத்தன்மை நிரூபிக்கப்படவில்லை' என்றும் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது

From around the web